கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வகையில் புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கில் மேலும் தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதுச்சேரியில் கோவில் திருவிழாக்கள் மற்றும் சமய விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தினசரி இரவு ஊரடங்கு (இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை)
இரவு ஊரடங்கு உத்தரவு தவிர மற்ற நேரங்களில் கடற்கரையும் பூங்காவும் திறந்திருக்கும்.
திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம்.
இறுதிச் சடங்கில் 20 பேர் வரை பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.