தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்துக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தக்காளி கிலோ ரூ.180க்கு விற்பனையானது.
இதையடுத்து, பசுமை பண்ணை கடைகளில் தக்காளி விலை கிலோவிற்கு 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ நாட்டு தக்காளியின் மொத்த விற்பனை விலை ரூ.30 குறைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முதல் ரக தக்காளி கிலோ ரூ.110க்கு விற்பனையான நிலையில் இன்று கிலோ ரூ.30 ரூபாய் குறைந்து ரூ.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 2ம் ரக தக்காளி ரூ.100ல் இருந்து ரூ.30 ஆக குறைந்து ரூ.70க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலை சற்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.