நடிகர் கமலுக்கு நோட்டீஸ் – தமிழக மருத்துவத்துறை..! ஏன்..?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் கமலுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இதற்கிடையில், நடிகர் கமல்ஹாசன் கடந்த 4-ந் தேதி கொரோனா சிகிச்சையை முடித்துவிட்டு நேராக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்று  கலந்து கொண்டார். 

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து நேராக கொரோனா விதிகளை மீறி படப்பிடிப்புச் சென்றது குறித்து தமிழக மருத்துவத்துறை விளக்கம் கேட்டு கமலுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!