கோவிஷீல்டு தடுப்பூசியின் உற்பத்தியை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாக சீரம் நிறுவனம் அறிவிப்பு

அடுத்த வாரம் முதல் கோவிஷீல்டு தடுப்பூசியின் உற்பத்தியை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது பற்றி பேசிய சீரம் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா, தடுப்பூசியின் தேவையை விட விநியோகம் அதிகமாக இருப்பதால் உற்பத்தியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் ஆர்டர்கள் அடுத்த வாரம் முடிவடையும் நிலையில் புதிய ஆர்டர்கள் வராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!