சமீபகாலமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட கருவிகள் மூலம் இசைக்கப்படுவதாகவும் இதனால் விழாவில் பங்கேற்பவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை வாசிக்கும் போது உதட்டளவில் கூட பாடுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில், பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதிலாக விழா நடத்துபவர்கள், தமிழ் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடுவதற்கு பயிற்சி பெற்றவர்கள் ஏற்பாடு செய்யுமாறும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.