கொரோனாவிலுருந்து உருமாறியுள்ள ஓமிக்ரான் வகை வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 9ஆம் தேதி நிலவரப்படி, 63 நாடுகளில் இந்த ஓமிக்ரான் வகை வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஓமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது. குஜராத்தில் ஏற்கனவே நான்கு பேர் ஓமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒருவருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குஜராத்தில் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.