ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் தனுர் மாத பிறப்பு எனப்படும் மார்கழி முதல் நாளான இன்று ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 108 வைணவ ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தனமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா மற்றும் மார்கழி மாத விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிடப் பெண்ணாக பிறந்தது ஸ்ரீ ரங்கநாதருக்கு பூமாலை சூட்டி பின் பாமாலை பாடி அரங்கனை அடைந்தார். அரங்கனை அடைய 30 நாட்கள் மார்கழி மாதம் நோன்பிருந்து திருப்பாவை பாடிய ஆண்டாள் நோன்பு நோற்ற காலமான இந்த மார்கழி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதனடிப்படையில் இன்று காலை 9. 20க்கு மார்கழி மாத முதல் நாள் பிறப்பையொட்டி ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக வெள்ளிக்கிழமை குரடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கம்ன்னாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 30 திருப்பாவைகள் தங்க இழைகளால் நெய்யப்பட்ட புடவை ஸ்ரீ ஆண்டாளுக்கு சாட்றப்பட்டது. திருமணமாகாத கன்னிப் பெண்கள் ஸ்ரீஆண்டாள் நோன்பு நோற்ற இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி ஸ்ரீ ஆண்டாளை தரிசனம் செய்தால் திருமணம் நடக்கும் என்பதால் காலை முதலே கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Translate »
error: Content is protected !!