முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர்.
சென்னை,
பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியின் பெயரில் உள்ள 6 வங்கிக் கணக்குகளை போலீஸார் முடக்கியுள்ளனர். ராஜேந்திர பாலாஜியின் பணப்பட்டுவாடாவை தடுக்க வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜேந்திரபாலாஜி வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க கடந்த 23ம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.