தமிழகத்தில் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

சென்னை கோட்டூர்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பற்ற கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 1,500 பள்ளி கட்டடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை இடிக்கும் பணி நடந்து வருகிறது.

பள்ளிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளிக்க அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி அமைக்கப்படும். நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு(10,12) கண்டிப்பாக நடத்தப்படும். திருப்புதல் தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும். அதைத் தொடர்ந்து ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும். என்று கூறினார்.

Translate »
error: Content is protected !!