முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்தார். அதில், 2021ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான பல்வேறு அம்சங்கள் அறிவிக்கப்பட்டது . குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி உதவியுடன் ‘Rights’ திட்டம் அறிவிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான முன்மாதிரி திட்டம் ரூ.1,702 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு முதல் கட்டமாக 2.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த முன்மாதிரி திட்டத்திற்கு ஆலோசகர்களை நியமிக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாற்று திறனாளிகளுக்கான நோய் தடுப்பு பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகள், தொழில் பயிற்சி, தன்னிறைவு மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்வதே திட்டத்தின் நோக்கமாகும்.