குஜராத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் 5 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுஜித் சாகேட் என்ற 27 வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
அவர் சாக்லேட் தருவதாக கூறி சிறுமியை மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. வாலிபர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சூரத் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.காலா, குற்றம் சாட்டப்பட்ட சுஜித் சாக்கெட்டை தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும் என நேற்று உத்தரவிட்டார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், சுஜித் சாக்கெட் தனது காலணியை கழற்றி நீதிபதி மீது வீசினார், அது இலக்கைத் தவறவி, சாட்சி நிலையம் அருகே விழுந்தது. இந்த சம்பவம் நீதிமன்றத்தில் இருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.