காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை 551 கோயில்களை திருப்பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கோவில்களில் இருந்து கிடைக்கும் வருமானம் அந்தந்த கோவில்களுக்கு வழங்கப்படும். இதில் கிடைக்கும் வருமானம் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கவும், கோவில் திருப்பணிகள் செய்யவும் பயன்படுத்தப்படும். இதுதான் தமிழக அரசின் நோக்கம்.
நாளை மறுநாள் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளதால், தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் புத்தாண்டையொட்டி இரவு 12 மணி வரை திறந்திருக்கும். எனவே, பக்தர்கள் அனைவரும் ஓய்வெடுத்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.