சென்னை அண்ணாநகரில் பிரபலமான 6 அடுக்குகள் கொண்ட மால் உள்ளது. இந்த மாலில் 250க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 10 திரைகள் கொண்ட திரையரங்கம் உள்ளது. இந்த மாலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழையால் மாலின் பால் சீலிங் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் கடைவீதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.