சென்னையில் நேற்று எதிர்பாராத கனமழை.. மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனியில் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள். விமர்சிக்க தயாராக இல்லை. இதை சரி செய்ய வேண்டும். அடுத்த மழைக்காலம் வருவதற்குள் இவற்றை சரி செய்துவிடலாம் என நம்புகிறோம். நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னையில் நேற்று எதிர்பாராத கனமழை பெய்தது. தேங்கிய மழைநீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!