கொரோனா பரவல்: கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவு தீவிரப்படுத்தப்படுமா? – இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை

கர்நாடகாவில் கொரோனாவுடன் ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது, பெங்களூரில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதேபோல், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

ஆலோனையின் முடிவில் ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர். கூட்டத்தின் முடிவில் ஊரடங்கு உத்தரவு தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!