தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

2022 ஜனவரி முதல் நாளைத் தகுதி நாளாகக் கொண்டு இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தம், முகவரி மாற்றம் செய்ய, நவம்பர் மாதம் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 3 கோடியே 12 லட்சத்து 26 ஆயிரத்து 759 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 23 லட்சத்து 91 ஆயிரத்து 250 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 7804 வாக்காளர்கள் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 7 லட்சத்து 11 ஆயிரத்து 755 வாக்காளர்கள் உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் குறைந்தது ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 517 வாக்காளர்கள் உள்ளனர்.

Translate »
error: Content is protected !!