தெலுங்கானாவில் கைத்தறி நெசவாளர் ஒருவர் தனது திறமையை திறமையை வெளிப்படுத்தும் வகையில், தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையிலான சேலையை நெய்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் நல்லா விஜய் என்பவரால் இந்த புடவை நெய்யப்பட்டது. அவர் இதனை தெலங்கானா அமைச்சர்கள் கே.டி. ராமா ராவ், சபிதா இந்திராரெட்டி, ஸ்ரீனிவாஸ் கவுடா, எர்ரபெல்லி தயாகர் ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று காட்சிபடுத்தினார்.
அந்த புடவையை அமைச்சர் சபிதா ரெட்டிக்கு நல்ல விஜய் பரிசாக வழங்கினார். இந்த புடவையை கையால் நெய்ய 6 நாட்கள் ஆனதாகவும், இயந்திரம் மூலம் 2 நாட்களில் நெய்ய முடியும் என்றும் நல்ல விஜய் தெரிவித்தார்.