திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் – பிரதமர் நரேந்திர மோடி

உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் தை மாதம் 2ஆம் தேதி (ஜனவரி 15) உலகத் தமிழர்களால் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதவில், “திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை.

பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்” என்று கூறி அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

Translate »
error: Content is protected !!