டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய அலங்கார வாகனம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்க்கிறோம் என்றும் சர்வதேச தலைவர்களுக்கு இவர்களைப் பற்றி தெரியாது எனவும் கூறி மத்திய அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார வாகனங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் அடங்கிய மேற்கு வங்க வாகனத்தை மத்திய அரசு நிராகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.