டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய அலங்கார வாகனம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்க்கிறோம் என்றும் சர்வதேச தலைவர்களுக்கு இவர்களைப் பற்றி தெரியாது எனவும் கூறி மத்திய அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக பட்டது.
இந்நிலையில் தமிழகத்தின் ஊர்தி இடம் பெறாதது ஏன்? என பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழ்நாடு உட்பட மொத்தம் 29 மாநிலங்களில் இருந்து பரிந்துரைகள் வந்தன. தமிழ்நாடு அலங்கார ஊர்தி 3வது சுற்று வரை தகுதி பெற்றது.
ஆனால் இறுதி 12 அலங்கார ஊர்திகளில் தமிழகம் தேர்வு செய்யப்படவில்லை. நிபுணர்கள் குழு அலங்கார ஊர்தி அணிவகுப்பைத் தேர்ந்தெடுக்கிறது. ” இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அமைச்சர் ரஜ்நாத் சிங் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.