ஆந்திர: அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

ஆந்திர மாநிலம் கர்னூலில் சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி தள்ளிவிட்டு மறுபுறம் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீதும் மோதியது.

கர்னூலில் உள்ள விசி காலனி பகுதியில் நேற்று நடந்த இந்த சம்பவத்தில் பாதசாரிகள் 3 பேர் படும் காயமடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!