மும்பை பங்குச் சந்தை 1,100 புள்ளிகள் சரிவுடன் தொடக்கம்..!

மும்பை பங்குச் சந்தை கடந்த வாரம் வர்த்தகம் சரிந்த நிலையிலேயே காணப்பட்டது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57,858.15 புள்ளிகளில் முடிவடைந்தது. இன்று காலை வர்த்தகம் ஆனது 540 புள்ளிகள் சரிந்து 57,317.38 புள்ளிகளாக உள்ளது. காலை 10.00 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 56,752.49 புள்ளிகளில் வர்த்தகமாகி வந்தது. இன்று காலை சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்தனர்.

Translate »
error: Content is protected !!