கேரளாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது.. ரயில் சேவைகள் பாதிப்பு

கேரளாவில் உள்ள ஆலுவா ரயில் நிலைய யார்டில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதையடுத்து, இன்று காலை முதல் ஷோர்னூர்-எர்ணாகுளம் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு 10.30 மணியளவில் ஆலுவா நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் நுழைந்தபோது சரக்கு ரயிலின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது வேகன்கள் தடம் புரண்டன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பல்வேறு ரயில் நிலையங்களில் சில ரயில்கள் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டதால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது மற்றும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: தடம் புரண்ட சரக்கு ரயில், 42 வேகன்களுடன் ஆலுவா மற்றும் கொல்லம் ரயில் நிலையங்களில் இறக்குவதற்காக தமிழகத்தில் இருந்து சிமென்ட் ஏற்றிச் சென்றது.

Translate »
error: Content is protected !!