5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், கூடுதல் தளர்வுகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கென வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதியுடன் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துள்ளதால், கூடுதல் தளர்வுகளை இன்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வீடு வீடாக சென்று மேற்கொள்ளும் பிரச்சாரத்திற்கு 20 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளரங்க பிரச்சாரத்தில் 50 சதவீதம் பேரும், திறந்தவெளி மைதான பிரச்சாரத்தில் 30 சதவீதம் பேரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலை பேரணி, பாதயாத்திரை, இருசக்கர மற்றும் பிற வாகன பேரணிகளுக்கான தடை நீடிப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது………..