தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 57 ஆயிரத்து 778 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.மொத்தம் உள்ள 12 ஆயிரத்து 836 பதவிகளுக்காக 74 ஆயிரத்து 383 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும், அதில் 2 ஆயிரத்து 62 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 14 ஆயிரத்து 324 மனுக்கள் திரும்ப பெறப்பட்டதாகவும், 218 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மீதமுள்ள 12 ஆயிரத்து 607 பதவியிடங்களுக்காக 57 ஆயிரத்து 778 பேர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.