இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமிய மதத்தை தீவிரவாத மதமாக கட்டமைக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக இயக்குனரும் நடிகருமான அமீர் குற்றம்சாட்டியுள்ளார். இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவாக உள்ள இறைவன் மிகப் பெரியவன் படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அமீர், இஸ்லாமிய மதத்தை தீவிரவாத மதமாக கட்டமைக்கும் முயற்சிகள் நடப்பதாக தெரிவித்தார். மேலும் தற்போது புதிதாக வருபவர்கள், தங்கள் சாதி அடையாளங்களை முன்னிருத்துவது மோசமான விஷயம் எனவும் குற்றம் சாட்டினார். தனது இறைவன் மிகப் பெரியவன் திரைப்படம் பல்வேறு மதங்களை பின்னணியாக கொண்ட மனிதர்களிடையே உள்ள அழகான உறவு குறித்து பேசும் எனவும் கூறினார்.