புதுச்சேரியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு ஒருநாள் இலவச பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரியில் இருந்து பாகூர் வரையில் தனியார் பேருந்தில், பொதுமக்களுக்கு ஒரு நாள் இலவசமாக பயண சேவையை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்.