தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை விதிகளுக்கு அப்பாற்பட்டு அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாரயணணுக்கு நூலகத்துடன் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பின் எடுத்த நடவடிக்கையின் காரணமாக 15 சதவீத விபத்துக்கள் குறைந்துள்ளது எனவும், தமிழக அரசின் மாடலை பின்பற்றலாம் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி ராஜ்யசபாவில் பேசும்போது தெரிவித்ததாக கூறி பெருமிதம் அடைந்தார்.