மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு

 

நாடு முழுவதும் MBBS, BDS உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற ஜூலை 17ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் NEET  தேர்வு ஜூலை 17-ல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை மறுநாள் தொடங்குகிறது எனவும், நாளை மறுநாள் முதல் மே 7-ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நாளை மறுநாள் முதல் மே-7 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!