இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் நிலவி வரும் மக்கள் கிளர்ச்சி போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வரும் வண்ணம் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 36 மணிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உத்தரவை மீறி பொதுமக்கள் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் திரண்ட தமிழ் மற்றும் சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக ஆவேச கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பொது மக்களை போலீசார் விரட்டியடித்தனர். கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் நடைமுறையில் இருந்து வரும் அவசர நிலை பிரகடணம் வாபஸ் பெறப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!