சிவகாசி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா

சிவகாசி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா கடந்த 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி  அதி விமரிசையாக  நடைபெற்று வருகிறது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான கயிர்குத்து திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின்போது குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் தங்களது உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திய தோடு பல்வேறு வேடமணிந்து கைகளில் வேப்பம் குலையுடன் மாரியம்மன் கோவிலை சுற்றி வந்து அம்மனை வணங்கி வழிபாடு செய்து வேப்பிலை  படுக்கையில் படுத்து உருண்டு எழுந்தனர்.

அதே போன்று ஏராளமான பக்தர்கள் ஆயிரம்கண்பானை யுடன் அக்னி சட்டி எடுத்து, கயர் குத்தி, முடிக்காணிக்கை செலுத்தினர். மேலும் கோயில் முன்பாக பொங்கலிட்டு மாவிளக்கு வைத்து முத்து  காணிக்கையுடன் தங்களது பல்வேறு நேர்த்திக் கடன்களை அம்மனுக்கு செலுத்தினர்.

மேலும் பக்தர்கள் பலர் தவழும் பிள்ளை, கை, கால்,  வீடு போன்ற   வடிவங்களில் உருவாக்கப்பட்ட பொம்மைகளை பயபக்தியுடன் எடுத்துச்சென்று தாங்கள் அம்மனை மனதில் நினைத்து வேண்டிய வேண்டுதல் நிறைவேறியதற்காக கோவிலில் செலுத்தினர்.

விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் காவல்துறை கட்டுப்பாட்டு அறை அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக தொடர்ந்து கூட்டத்தை கண்காணித்தனர் காவல் துறையினர்.

கடந்த இரண்டு வருடங்களாக  கொரானா காலகட்டத்தில் சரிவர திருவிழா நடைபெறாமல் விழாவில் பங்கேற்க முடியாமல் இருந்ததால், தற்போது குடும்பத்துடன் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில் கலந்துகொண்டு அம்மை நோய் போன்ற பல்வேறு நோய்களில் இருந்து விடுபட மாரியம்மனை வணங்கி வழிபட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக பக்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!