செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை 700க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்-விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நாட்டார்மங்கலம், வளத்தி, அப்பம்பட்டு, ஆலம்பூண்டி போன்ற பகுதியில் நேற்று முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகின்றது.
இதன் காரணமாக செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு இன்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்த நிலையில் 1500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிலையில் 700-க்கும் மேற்பட்ட மூட்டைகளை வெளிப்பிரகாரத்தில் களத்தில் உள்ள மூட்டைகளுக்கு அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சார்பாக தார் பாய்கள் வழங்கப்பட்டாலும், அதிக மழையின் காரணமாக நனைந்தால் எதிர்பார்த்த விலைக்கு போகாததால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வெளிப்பிரகாரத்தில் உள்ள நெல் மூட்டைகளை முதலில் எடை போடாமல் குடோனில் உள்ள நெல் மூட்டைகளை எடைபோட்டதுதான் இந்த பிரச்சினை என்றும், வெறும் 700 முட்டைகளை முதலில் எடை போட்டு இருந்தால் அந்த மழையில் நாங்கள் பாதிக்கப்பட்ட இருக்க மாட்டோம் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.