அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு திரிபுரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அச்சு, இணையம் மற்றும் மின்னணு ஊடக நிறுவனங்களுடன் தொடர்புடைய அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு திரிபுரா அமைச்சரவை-யில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, 21 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட ஊடகவியலாளர்கள் மற்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் அல்லது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேராதவர்களாக இருப்பின் அவர்கள் அரசின் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு தகுதியானவர்களாக கருதப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள், அவரது குடும்பத்தினர் 3 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவுகளை அரசே ஏற்கிறது.