கொரோனா அதிகரிப்பால் உத்தர பிரதேசத்தின் கௌதம புத்தா நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், அரியானா உள்பட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு மே 1 முதல் 31 வரை உத்தர பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகரில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளதுடன், பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளின் போது பள்ளிகளில் சமூக இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அனுமதியின்றி யாரும் போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தப்பட கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தளங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், பொது இடங்களில் பூஜைகள் நடத்த அனுமதிக்கப்படாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.