உத்தமபாளையத்தில் தேக்கடி தேவி கோயில் சித்திரை திருவிழா தமிழக கேரள பக்தர்கள் இணைந்து கொண்டாடினர். தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள தேக்கடியில் தமிழக நீர்வளத்துறை அலுவலகத்திற்கு அருகில் தேவி கோயில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா தமிழக கேரள பக்தர்கள் இணைந்து கொண்டாடுவார்கள். இரண்டு ஆண்டுகளாக கொரானா தடை உத்தரவால் நடைபெறாமல் இருந்து வந்த திருவிழா ஏப்.24ல் துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது திருவிழா இன்று மாலையோடு நிறைவடைகிறது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
நிறைவு நாளான இன்று பக்தர்கள் குமுளி மலைப்பாதையில் உள்ள காளியம்மன் கோயிலில் இருந்து தேவி கோயில் வரை மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக இரு மாநில பெண்கள் வந்தனர். ஷண்ட மேளம், ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகிய இரு மாநில பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேரள மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆரவாரத்துடன் கோலாகலமாக திருவிழா விமர்சியாக நடைபெற்றது. மேலும் சமபந்தி போஜனம் நடந்தது.தமிழக-கேரள பொதுமக்கள் கலந்து கொண்டதால் குமுளியில் இரு மாநில காவல்துறையினர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். திருவிழா ஏற்பாடுகளை தேக்கடி தேவி கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.