மும்பை பங்கு சந்தை இன்று வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 950 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் மற்றும் வங்கிகளுக்கு இடையேயான ரெப்போ வட்டி விகிதம் உயர்வு போன்ற காரணங்களால் மும்பை பங்கு சந்தை கடந்த சில தினங்களாகவே இறக்கத்தை கண்டு வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக ஏற்றத்தை கண்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் மும்பை பங்கு சந்தை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 987 புள்ளிகள் சரிந்து 53 ஆயிரத்து 221 என நிலைக் கொண்டு வர்த்தகமாகியுள்ளது. இதேபோல் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 288 புள்ளிகள் சரிந்து 15 ஆயிரத்து 951 என நிலை கொண்டு வர்த்தகமாகியுள்ளது. இதில் இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் குறிப்பிடதக்க இழப்பை சந்தித்தன.