இந்திய- வங்கதேசம் இடையே மீண்டும் பேருந்து சேவை

 

இந்திய- வங்கதேசம் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை  தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா- வங்கேதசம் இடையிலான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்ததை அடுத்து, கடந்த மாதம் 29ம் தேதி முதல் வங்கதேசம்- இந்தியா இடையிலான ரயில்சேவை மீண்டும்  தொடங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று முதல் இந்திய- வங்கதேசம் இடையே  எல்லை தாண்டிய போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இத்தகவலை உறுதி செய்த வங்கதேச தூதரகம் தாக்காவிலிருந்து கொல்கத்தா வரை  இரு வழிதட சேவை மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், 4 தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!