அரிசிக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு

மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் !

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உணவான அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதித்துள்ளது மத்திய அரசு. இதேபோல, பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. புதிய வரியால் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கும்.

ஏற்கெனவே கடும் விலைவாசி உயர்வால் பரிதவிக்கும் பொதுமக்கள் மேலும் சிரமப்படுவர். எல்லாவற்றுக்குமே ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டுமென்ற மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ளாவிட்டால், மக்களின் கடும் கோபத்திலிருந்து தப்ப முடியாது. எனவே, உடனடியாக புதிய வரி விதிப்புகளை வாபஸ் பெறுவது அவசியம்.

Translate »
error: Content is protected !!