18.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
19.07.2022, 20.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
21.07.2022, 22.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
நடுவட்டம் (நீலகிரி) 8, திருப்புவனம் (சிவகங்கை) 7, பார்வூட் (நீலகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), அவினாசி (திருப்பூர்) 5, கொடைக்கானல் (திண்டுக்கல்), பரமத்திவேலூர் (நாமக்கல்), ஹரிசன் எஸ்டேட், சேரங்கோடு (நீலகிரி) தலா 4, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), மதுரை தெற்கு (மதுரை), கிளென்மார்கன் (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), PWD அலுவலகம், திருப்பூர் (திருப்பூர்) தலா 3. வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), மேட்டுப்பட்டி (மதுரை), ஏற்காடு (சேலம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), ராசிபுரம் (நாமக்கல்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), தல்லாகுளம் (மதுரை), பண்ருட்டி (கடலூர்), திருப்பூர் (திருப்பூர்), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), வேலூர் (வேலூர்), சோலையாறு (கோயம்புத்தூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), திருவள்ளூர் (திருவள்ளூர்), ஓமலூர் (சேலம்), வல்லம் (தஞ்சாவூர்), வால்பாறை PAP (கடலூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), அதனகோட்டை (புதுக்கோட்டை), வானமாதேவி (கடலூர்), சூரப்பட்டு (விழுப்புரம்) தலா 2, புலிப்பட்டி (மதுரை), சென்னை விமான நிலையம் (சென்னை), அன்னூர் (கோயம்புத்தூர்), மேல் பவானி (நீலகிரி), மேலூர் (மதுரை), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), இலுப்பூர் (புதுக்கோட்டை), பெருந்துறை (ஈரோடு), சிட்டம்பட்டி (மதுரை), மங்களபுரம் (நாமக்கல்), மேலாளத்தூர் (வேலூர்), சாத்தூர் (விருதுநகர்), பெருங்களூர் (புதுக்கோட்டை), ஊத்துக்குளி (திருப்பூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), ஈரோடு (ஈரோடு), அவலாஞ்சி (நீலகிரி), விரிஞ்சிபுரம் KVK (வேலூர்), குடிதாங்கி (கடலூர்), கோலியனூர் (விழுப்புரம்), மஞ்சளாறு (தேனி), ஏத்தாப்பூர் (சேலம்), புதுவேட்டக்குடி (பெரம்பலூர்), கஞ்சனூர் (விழுப்புரம்), திரூர் KVK (திருவள்ளூர்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
18.07.2022: இலங்கையை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.