தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி பணிகள் முழு வீட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது பல பகுதிகளிலும் நடவு பணிகள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் கட்டத்தை எட்டி உள்ளது.
நேற்று இரவு தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதில் அதிகப்படியாக தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் 17 செண்டிமீட்டர் ஈச்சன்விடுதியில் 16 சென்டிமீட்டரும், பட்டுக்கோட்டை, வல்லம் ஆகிய பகுதிகளில் ஏழு சென்டிமீட்டரும் மழை பதிவானது.
இந்த மழை குருவை சாகுபடிக்கு ஏற்றதாக இருந்தாலும் தற்போது நடவு நட்ட இளம் பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் படிகால் வசதிகள் முறையாக இல்லாததால் சுமார் 50 ஏக்கருக்கு மேல் நடவு நட்டு 20 நாட்களை ஆனா இளம் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் நீர் வடியாமல் பயிர்கள் பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.