அக்னிபத் திட்டத்தில் கடற்படை பணிக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்கு 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய அக்னிபத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடந்த நிலையில், தற்போது இந்திய கடற்படையில் காலியாக உள்ள 3 ஆயிரம் பணி இடங்களுக்கு சுமார் 9 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 82 ஆயிரத்து 200 பேர் பெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், இந்திய விமானப்படையில், சுமார் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.