சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி OTT தளத்தில் வெளியீடு

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை OTT தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றது.

இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற உள்ள நிறைவு விழா நிகழ்ச்சியை டிஜிட்டல் மற்றும் OTT தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்று முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை விருப்பமுள்ள ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தம் கோரலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!