வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டு (2022 -23) முதல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பாடத்திற்கான பட்டம் (B.Sc. Hons) மற்றும் பட்டயப் படிப்பிற்கான கல்லூரி தொடங்கப் படுகிறது.
பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு விவரம் பின்வருமாறு: இளங்கலை வேளாண்மை – B.Sc (Hons) Agri இளங்கலை தோட்டக்கலை – B.Sc (Hons) Horti வேளாண்மை பட்டய படிப்பு – Diploma in Agri தோட்டக் கலை பட்டய படிப்பு – Diploma in Horti வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பும் வேலைவாய்ப்பும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு வேலை வாய்ப்புகள் தற்போது அதிகம் உள்ளன.
தனியார் துறைகளிலும் இவர்களின் பணி அதிகம் தேவைப்படுகிறது. குறிப்பாக பின்வரும் நிறுவனங்களுக்கு இத்தகைய பட்டதாரிகளின் பணி அவசியமாகிறது. கரிம உற்பத்தி, வேளாண்மை துறை, உணவை பதப்படுத்துதல், உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துவது, உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவது, வேளாண் பொருட்களையும் உணவுப் பொருட்களையும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களுடன் பணியாற்றுவது, விவசாயத் துறைக்கு தேவைப்படும் உரம் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை உற்பத்தி செய்வது, சந்தைப்படுத்துவது மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் காத்திருக்கின்றன.
பெருகி வரும் மக்கள் தொகையால் வேளாண் பொருட்களின் தேவை அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக வேளாண் துறையில் வேலை வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. வேளாண் பண்ணை அமைப்பது மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்கான அனைத்து பயிற்சிகளையும் கல்வி கற்கும் காலத்திலேயே மாணவர்களுக்கு அளிக்கிறோம். இதனால் கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்கள் சுய தொழில் தொடங்குவதற்கும், வேளாண் நிறுவனங்களில் வேலையில் சேர்வதற்கும் தகுதி உள்ளவர்களாக இருப்பார்கள்.
ஆராய்ச்சியாளர்கள்:- மாணவர்களை, வேளாண் சார்ந்த சர்வதேச மற்றும் தேசிய நிறுவங்களில் பணியாற்றுவதற்கும், மேற்படிப்பு படிப்பதற்கும் தகுதி உள்ளவர்களாக உருவாக்குவோம். வேளாண் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வேளாண் விரிவாக்கத் துறையினரோடு கலந்துரையாடும் வாய்ப்பை கல்லூரி ஏற்படுத்தும். புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதனால் மாணவர்கள் கல்வி அறிவோடு, நடைமுறை அறிவையும் நன்றாக பெற்று, படித்து முடித்ததும் பணியில் சேருவதற்கு தகுதி உள்ளவர்களாக இருப்பார்கள்.
வங்கித்துறை:- வேளாண் துறையில் வங்கிகள் பெரும் பங்காற்றி வருகின்றன. வங்கித் துறையில் வேளாண் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு மிகுதியாக உள்ளது. எங்கள் உதவிப் பேராசிரியர்கள் வங்கிகளில் வேலை வாய்ப்பை பெறுவதற்கான பயிற்சியையும் மாணவர்களுக்கு அளிப்பார்கள். மாணவர்கள் வங்கிப் பணியில் சேர்வதற்கான முழு தகுதியையும் பெறுவார்கள்.
அரசு ஆட்சிப் பணி பதவிகள்:- வேளாண் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரசு பணிக்கான போட்டித் தேர்வு எழுதவும் பயிற்சி அளிக்கப் படுகிறது. IAS, IPS, IRS, IFS போன்ற அரசு ஆட்சிப் பணிக்கான தேர்வுகளுக்கு வழிகாட்டுதல் வகுப்பும் நடத்தப் படுகிறது.
சுயதொழில்:- வேளாண் பட்டதாரிகளுக்கு வேளாண் துறையில் சுயதொழில் செய்வதற்கான வாய்ப்பு ஏராளமாக உள்ளது. இயற்கை முறை விவசாயம், உரம் மற்றும் பூச்சுக் கொல்லி தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல், உணவு பொருட்கள் ஏற்றுமதி எனபல வாய்ப்புகள் உள்ளன. இவற்றிற்கான பயிற்சியும் நாங்கள் அளிக்கின்றோம்.
கல்லூரியில் உள்ள சிறப்பு அம்சங்கள் கல்லூரி சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை பெற்றுள்ளது. முனைவர் பட்டம் பெற்ற அனுபவமுள்ள மிகச் சிறந்த பேராசியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்; மிகப் பெரிய நூலகம் உள்ளது; நவீன ஆய்வகங்கள்; WIFI வசதியுடன் கூடிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனி விடுதி; வேளாண் மற்றும் தோட்டக் கலைக்கான பயிற்சி பண்ணைகள் உள்ளன; வேலை வாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான (TNPSC, ICAR, CIVIL SERVICE, BANK) பயிற்சி மற்றும் ஆலோசனை மையம் உள்ளது. பட்டம் மற்றும் பட்டயப் படிப்பில் சேர்வதற்கான கல்வித் தகுதி மேல் நிலை (HSC) வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பாடப்பிரிவுகள்- கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல். அல்லது இயற்பியல், வேதியல் தாவரவியல் மற்றும் விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் கண்ணி தொழில்நுட்பம் / உயிர் நுடபவியல் / உயிர் வேதியியல் / வேளாண்மை / சுற்றுப்புறவியல் / தோட்டக்கலை இவற்றில் ஏதேனும் ஒன்று.