கரணம் அடித்தபோது மயங்கிவிழுந்த கபடி வீரர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவில் கடந்த 8ம் தேதி மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் களத்துமேட்டு கே.எம்.எஸ். கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவை சேர்ந்த கபடி வீரர் வினோத்குமார் (34) என்பவர் கபடி பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது, வினோத் குமார் கரணம் அடிக்கும் பயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்தார். உடனடியாக வினோத்குமார்ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கபட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி கபடி வீரர் வினோத் மரணமடைந்தார். உயிரிழ்ந்த வினோத்துக்கு சிவகாமி என்ற மனைவியும் சந்தோஷ், கலையரசன் என்ற மகன்களும் உள்ளனர்.  இந்நிலையில், பயிற்சியின் வினோத் மயக்கமடைந்து மூர்ச்சையாகும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!