தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் G-pay, Paytm மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
முதற்கட்டமாக சில நியாயவிலைக் கடைகளில் அறிமுகம் செய்தபின், மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும்.
மேலும் நியாய விலை கடைகளில் 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.