அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் இன்று (செப்டம்பர் 2) மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேயருக்கு 108 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.

Translate »
error: Content is protected !!