ஜெர்மனியை நோக்கி 4 பேருடன் சென்ற தனியார் ஜெட் விமானம் ஒன்று லாத்வியாவில் நேற்று (செப்டம்பர் 4) விபத்துக்குள்ளானது. ஆஸ்திரியாவை சேர்ந்த செஸ்னா 551 ரக ஜெட் விமானம் பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, பால்டிக் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைத்தது.
எரிபொருள் தீர்ந்ததால் அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது. இறந்தவர்கள் உடல்கள் தேடப்பட்டு வருகின்றன.