பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மை சமூகத்தினராக சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். எனினும், இந்தியாவுடனான தொடர்பை அவர்கள் விட்டு விடாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டில் இருந்து 48 சீக்கிய யாத்ரீகர்கள் இந்தியாவில் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
இதற்காக பாகிஸ்தானின் பெஷாவர் மற்றும் பிற நகரங்களில் இருந்து அவர்கள் அட்டாரி வாகா எல்லை வழியே இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். பஞ்சாப்பின் அமிர்சரஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவில், டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் ஹேம்குந்த் சாகிப் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர்கள் செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
இதன்படி, 25 நாட்கள் இந்தியாவில் தங்கி பல்வேறு பகுதிகளையும் பார்வையிடுகின்றனர். அதன்பின்னர் நாடு திரும்புகின்றனர். இதற்காக அவர்களுக்கு 25 நாட்களுக்கு விசா அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி யாத்ரீகர்களில் ஒருவர் கூறும்போது, முதலில் அமிர்சரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு நாங்கள் செல்வோம்.
அதன்பின்பு டெல்லி மற்றும் உத்தரகாண்டுக்கு செல்வோம். ஹேம்குந்த் சாகிப்புக்கு செல்வதற்காகவே நாங்கள் வந்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.