தி.மு.க.,வின் லோக்சபா தேர்தல் திட்டம்: கூட்டணியில் இணைவது யார் ?

தி.மு.க.,வின் லோக்சபா தேர்தல் திட்டம்; கூட்டணியில் இணையும் 3 கட்சிகள்?

வரும் லோக்சபா தேர்தலில், பா.ம.க., – தே.மு.தி.க., மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.’லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை. தேசிய அளவில் பா.ஜ., கூட்டணியை எதிர்கொள்ள, எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தான் முடியும்.

தனித்தனியாக போனால் அது நிச்சயமாக பாதிக்கும்’ என, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்தார்.இதன் வாயிலாக, லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பலம் வாய்ந்த அணியை உருவாக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளில், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியை தவிர, மற்ற கட்சிகள் தொடர்கின்றன.ஆனால், தொகுதி பங்கீட்டில் சில மாற்றங்களை செய்து, அணியை பலப்படுத்த, கூடுதலாக சில கட்சிகளையும் சேர்க்க, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!