குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி மீண்டும் 0.5 சதவீதம் அதிகரித்து, 5.9 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதனால் வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐ அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரத ரிசர்வ் வங்கி, 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டத்தை நடத்தி வருகிறது.
இதில் கடன் வட்டி விகிதம் உட்பட பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கின்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தொழில்கள் நலிவடைந்தன. இதனால், குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதை உறுதி செய்யவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டது.